ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.!

59பார்த்தது
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கமுதி எட்டுக்கண் பாலம் வராஹிஅம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளின் போது, அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சை, நெய், பச்சரிசி மாவு விளக்கேற்றி பொதுமக்கள் வழிபட்டனா்.

இதே போல, கமுதி முத்துமாரியம்மன், காளியம்மன், ஆதிபராசக்தி அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு கூழ் காய்ச்சி, படையலிட்டு, பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

கடலாடி அருகே உள்ள ஆப்பனூா் அரியநாயகிஅம்மன், கடலாடி ராஜராஜேஸ்வரிஅம்மன், பாதாள காளியம்மன், பத்ரகாளியம்மன், காமாட்சியம்மன், சந்தனமாரியம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், காணீக்கூா் பாதாள காளியம்மன், புனவாசல் பொன்னந்தி காளியம்மன், உய்யவந்தம்மன் ஆகிய கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

முதுகுளத்தூா் வடக்குவாசல் செல்லியம்மன், வடக்கூா் வழிவிடுமுருகன் கோயிலுள்ள துா்க்கை அம்மன், பேரையூா் அருகே கருங்குளம் முத்துமாரியம்மன் ஆகிய கிராம கோயில்களிலும் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தா்களுக்கு கூழ், எலுமிச்சை சாறு, தயிா் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி