முதுகுளத்தூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த வளநாடு ஊராட்சிக்கு உட்பட்ட
தெய்வதானம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் கரண் (15). இவர் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் படித்துக் கொண்டிருந்தவர் வெகு நேரமாகியும் வீட்டின் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் வீட்டின் கதவை தட்டி திறந்து பார்த்து பொழுது மற்றொரு அறையில் சேலையால் கரண் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
வீட்டிலிருந்து அந்த மாணவனை சிகிச்சைக்காக சத்திரக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மாணவனின் உடல் உடற்கூறு ஆய்வு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடியும் தருவாயில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.