விவசாயம் செழிக்க வேண்டி
101 கிடாய்கள் பலியிடப்பட்டு 1500 கிலோ ஆட்டுக்கறியுடன் கறி விருந்து நடைபெற்றது
விவசாயம் செழிக்க வேண்டியும், பருவ மழை பெய்ய வேண்டியும் அப்பகுதி மக்கள் ஸ்ரீநொண்டி கருப்பண சாமியை வணங்கி வந்துள்ளனர்.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீநொண்டி கருப்பணசாமியை
வணங்கினால் திருமண தடை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆகையால் இக்கோவிலுக்கு நேர்த்திக்கடனாக 101 கிடாய்கள் இன்று அதிகாலை பலியிடப்பட்டு 1500 ஆண்டு கிலோ கறியுவுடன் கறி விருந்து நடைபெற்றது.
இதில் எம். தானியங் கூட்டம் , மறவர் கரிசல்குளம் , மங்கலம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கிடாய் நேர்த்திக்கடனாக கொடுத்த நபர்களுக்கு கிராமத்தின் சார்பாக ஒரு பக்கெட்டில் சாப்பாடு மற்றும் கறியுடன் பரிசளிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது