தொடர்ந்து பெய்து வரும் மழையால் ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே 200 ஏக்கர் உப்பளங்கள் வெள்ள நீர் புகுந்து மூழ்கியது உப்பள தொழிலாளர்கள் கூறியதாவது: திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ஆனைகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உப்பளங்கள் உள்ளன. தற்போது பெய்த மழையால் பெருவாரியான உப்பளங்களில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. மிதமிஞ்சிய வெள்ள நீர் கொட்டகுடி ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது என்றனர்