ராமநாதபுரம்: வாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது!

5276பார்த்தது
வாளுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் விலக்கு சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர்கள் தங்கள் சட்டைக்குள் வாள் போன்ற ஆயுதத்தை மறைத்து வைத்து வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் பசும்பொன் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 28), குழந்தை வேலு (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 2 வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி