ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 591 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14,36,646 மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10,88,978 பேரில் 10,82,672 பேருக்கு பரிசோதனை செய்து, அவர்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்ட 4,27,026 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை துணைஇயக்குனர் தெரிவித்துள்ளார்.