சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வளநாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்குள் ஐந்து அடி நீளமுள்ள சாரபாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பை பார்த்த வீட்டில் உள்ள உறவினர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பாம்பைப் பாதுகாப்பாக பிடித்து காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.