சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசையை சேர்ந்த இளைஞர் பிரவீனை நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மானாமதுரை காவல் நிலைய போலீசார் சங்கமங்களத்தை சேர்ந்த சசிகுமார், தனுஷ், சுதர்சன், ரகுபதி, மற்றும் கிளங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் ஆகிய ஐந்து பேரை நேற்று(செப்.4) கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சசிகுமார் உட்பட மேலும் இரண்டு பேர் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.