சென்னையில் பாமக நிறுவனர் ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி மீண்டும் சந்தித்துள்ளனர். தற்போது ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாசை சந்தித்துப் பேசியிருந்தனர். இதைத்தொடர்ந்து, இருவரும் தி.நகரில் உள்ள ஏ.கே.மூர்த்தியின் மகன் இல்லத்தில் ராமதாசை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.