பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இருவரின் மோதலால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்துள்ளார். அவர் கூறுகையில், “கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மன உளைச்சலில் உள்ளேன். ராமதாஸும், அன்புமணியும் இணையாவிட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன். இன்னும் எதுவும் முடிவெடுக்கவில்லை" என்றார்.