இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் சில சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.