ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். திமுக தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர். அதிமுக ராஜ்யசபா சீட்டை தேமுதிகவுக்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என பிரேமலதா கூறியுள்ளார். இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் சுதீஷ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.