ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று (ஜூன். 10) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஜூன் 12ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். ராஜ்ய சபா தேர்தலுக்காக மொத்தம் 13 பேர் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.