தமிழ்நாட்டில் ராஜ்ய சபா தேர்தல் ஜூன் 19இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2இல் தொடங்கிய நிலையில் ஜூன் 9இல் நிறைவடைகிறது. இந்நிலையில் முதல் நாளில், 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதன்பின் கடந்த இரு தினங்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மநீம தலைவர் கமல்ஹாசனும் மனு தாக்கல் செய்கிறார்.