மாநிலங்களவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று (ஜூன் 2) தொடங்குகிறது. இதில், திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.