BCCI இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய BCCI தலைவர் ரோஜர் பின்னிக்கு 70 வயது ஆகிறது. இதனால், BCCI விதிகளின்படி அவர் நீக்கப்படுவதால், விரைவில் இதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் நடக்கும்வரை ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பதவி வகிப்பார் என்றும் ஜூலை மாதம் அவர் பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.