நாடு முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை மக்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர், இதனையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், பாட்ஷா படத்தில் வரும் வசனத்தை கூறி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான், புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.