தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.