தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (மார்ச் 16) ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.