தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை

22171பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 17) தென் தமிழகம், வட தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையுள்ள மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி