3 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை

74பார்த்தது
3 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை
கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 01) பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.