திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 06) பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.