ரயில் பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கவும் ரயில்வேயின் பிற வசதிகளை பெறுவதற்கும் ரயில்வே Whatsapp எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாட்பாட் தானியங்கி முறையில் செயல்படுகிறது. மனித தலையீடுகள் எதுவும் இல்லை. சாட்பாட்டுடன் உரையாடுவதன் மூலம் ரயில் பயணிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. 98811-93322 என்ற எண்ணை உங்கள் மொபைல் எண்ணில் சேகரித்து, அதன் பின்னர் வாட்ஸ் அப்பில் உரையாடலைத் தொடங்கலாம்.