மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இன்று (ஜூன் 9) ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலியாகினர். இதைக் கண்டித்து சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே அளித்த பேட்டியில், "ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரீல் அமைச்சர் ஆகியுள்ளார். விபத்துக்கு அவர் பொறுப்பு ஏற்காமல், ரீல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பல விபத்துகள் ஏற்பட்ட பிறகும் அவர் ராஜினாமா செய்யவில்லை" என விமர்சித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.