ராகுல் காந்திக்கு பயம்.. பிரதமர் மோடி

78பார்த்தது
ராகுல் காந்திக்கு பயம்.. பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி 2வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். கடந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் அவரது தாயாரின் மக்களவை தொகுதியான ரேபரேலியில் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி