நிழல் கிரகங்களான ராகு-கேதுவின் பெயர்ச்சி வரும் மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. பின்னோக்கி நகரும் அமைப்பு கொண்ட ராகு மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளன. இதன் மூலம் ரிஷபம், மிதுனம், கும்பம் ஆகிய ராசியினருக்கு நல்ல பலன்களைத் தரும். ராகுவின் தாக்கம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தரும். தடைபட்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நிதி ஆதாயம், வேலையில்லாதவர்களுக்கு வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.