மதுரை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு காளையை அடக்கி இருக்கீங்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மாட்டை பார்த்தால் ஓடிருவேன். மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது” என நகைச்சுவையாக பேசினார். தொடர்ந்து அவரிடம் நடிகர் விஜய் மற்றும் அஜித் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு, “வேற எதாவது பேசுவோமா” என தனது பாணியில் அந்த கேள்விகளை தவிர்த்தார்.