கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். அவரது 130-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.