இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து – வெங்கடதத்தா ராய் திருமணம் நேற்று (டிச.22) மாலை நடைபெற்றது. ராஜஸ்தானில் நடைபெற்ற அவர்களின் அழகிய திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. மிகக் குறைந்த அளவிலான நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். விரைவில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.