இந்திய பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியுள்ளார். மோடியுடனான உரையாடலின்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு புதின் கடும் கண்டனத்தை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக புதின் உறுதி அளித்தார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா விரைவில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.