சென்னை, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு பயனர் ஒருவர், ‘போலீஸ் இருப்பாங்க... ஹெல்மெட் போடுங்க’ என மேப் செய்துள்ளார். இந்த நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. இதுதொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, ‘ஹெல்மெட் விழிப்புணர்வு சார்ந்த அடுத்த பிரச்சாரத்தில் நமது போக்குவரத்து காவலர்கள் இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்கலாம்’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.