கண்களுக்கு கீழ் வீக்கம்.. தடுக்க எளிய வழிமுறைகள்

76பார்த்தது
கண்களுக்கு கீழ் வீக்கம்.. தடுக்க எளிய வழிமுறைகள்
சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, பெரியதாகவோ வீக்கம் இருக்கும். இது நம்மை சோர்வானவராகவும் கவர்ச்சியற்றவராகவும், சோகமாக இருப்பவராகவும் பிறருக்குக் காட்டிவிடும். ஆழ்ந்த தூக்கம் கண் வீக்கத்தில் இருந்து விடுதலை கொடுக்கும் என்பதால் அதை சரியாக மேற்கொள்ள வேண்டும். உடலில் சேரும் அதிக உப்பு, கண்ணில் நீரைத் தேக்கி வைக்கக்கூடும் என்பதால் அதில் கவனம் தேவை. தலையை சற்று உயரமாக வைத்து தூங்குவது நல்லது.