'தமிழிசை குடிக்க மாட்டார்'- திருமா பேச்சுக்கு வானதி கண்டனம்
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது ஒழிப்பு மாநாடு குறித்து தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்திருந்தார். ஆனால், உங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எவ்வித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. அதை சரிவர புரிந்து கொள்ளாமல், ஒரு பெண் மருத்துவர், மூத்த அரசியல் தலைவர் என பார்க்காலம் 'தமிழிசை குடிக்க மாட்டார் என நம்புகிறேன்’ என தனிப்பட்ட தாக்குதலை நீங்கள் நிகழ்த்துவீர்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என திருமாவளவனை விமர்சித்துள்ளார்.