புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கல்லிடைக்கம்பட்டியை சேர்ந்த சதாசிவம் மகுதுப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் சென்ற போது ராப்பூசல் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சதாசிவம் கொடுத்த புகாரையடுத்து, இலுப்பூர் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.