விராலிமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!

60பார்த்தது
விராலிமலை, இலுப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. அப்பகுதிகளில் மொத்தம் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் இதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 1 மணிநேரத்துக்கும்மேலாக பெய்த மழையால்,
விராலிமலையில் 20 மில்லி மீட்டர்,
இலுப்பூர் 10 மில்லி மீட்டர்,
அன்னவாசல் 7 மில்லி மீட்டர் மழை
பெய்துள்ளதாக வானிலை மையம்
தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி