விராலிமலை: பைக் மீது அறுவடை இயந்திரம் மோதி விபத்து!

58பார்த்தது
இலுப்பூரைச் சேர்ந்த கருப்பையா (42), கணேசன்(40) ஆகிய இருவரும் இலுப்பூரிலிருந்து விராலிமலைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, ராஜகிரி பேருந்து நிறுத்தம் அருகே அவர்களுக்கு எதிரே, அறுவடை இயந்திரத்தை ஒட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மோதிவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி