மாத்தூரில் வீடு புகுந்து திருடிய இருவர் கைது

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடி கொழுப்பட்டியைச் சேர்ந்தவர் காத்தான்(60). இவரது வீட்டுக்குள் 4 பேர் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்தனர். இதில் குடும்பத்தினர் கூச்சலிடவே கிராமத்தினர் திரண்டு 2 பேரை பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பியோடி விட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மாத்தூர் போலீஸார் பாலசுப்பிரமணி(36), இந்துபாரதி (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி