விராலிமலை ஒன்றியம் கொடும்பாளூர் சத்தி ரத்தை சேர்ந்தவர் செல்வம்(55). கூலித்தொழிலாளி. நேற்று காலை கொடும்பாளூர் சத்திரத்தில் இருந்து ஆரியக் கோன்பட்டிக்கு பைக் கில் சென்றுக்கொண்டி ருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த செல்வம் தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.