விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

85பார்த்தது
விராலிமலை: திருச்சி அண்ணா
நகரை சேர்ந்தவர் முகமது ரபீக்
மகன் யாசர் அரபாத்(28). திருச்சியில்
உள்ள ஒரு இறைச்சிக்கடையில்
வேலை பார்த்து வந்தார். கடந்த
6ம் தேதி பைக்கில் மதுரைதிருச்சி
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.
விராலிமலை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு யாசர் அராபத் நேற்று உயிரிழந்தார். விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி