விராலிமலை: வீட்டின் பூட்டு உடைத்து 20 பவுன் நகை கொள்ளை!

78பார்த்தது
விராலிமலை: வீட்டின் பூட்டு உடைத்து 20 பவுன் நகை கொள்ளை!
விராலிமலையைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி மஞ்சுளாதேவி. ராஜ கோபால் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக அன்னவாசல் அருகே உள்ள மூக்கணாமலைப்பட்டிக்கு சென்ற மஞ்சுளாதேவி நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு அதே எம்ஜிஆர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்தது.

விராலிமலை அடுத்தடுத்த 2 வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. தொடர் திருட்டால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் கந்தர்வகோட்டை, வடுகப்பட்டி, மங்கனுார் பகுதியில் வீடு மற்றும் கடைகளில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், வியா பாரிகள் அச்சத்தில் உள்ளனர். திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி