ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை!

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவ்வம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி வயது 47 இவருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் தீராத வயிற்று வலியின் காரணமாக மன வேதனையில் இருந்துள்ளார். மேலும் இவர் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பழனியாண்டியின் தகப்பனார் பொன்னையா கொடுத்த புகாரின் அடிப்படையில் இலுப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி