விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

66பார்த்தது
விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
விராலிமலை அருகே பாலாண்டாம் பட்டியில் அட்மா திட்டத்தின்கீழ் சிறுதானிய சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. வட்டார வேளாண்மை விவசா உதவி இயக்குனர் மணிகண்டன், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், சிறு தானியங்களை மதிப்பு ஊட்டுவதால் மகளிர் குழுவிற்கு கிடைக்கும் லாபங்கள் பற்றி கூறினார்.

தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் முகமது ரபி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், உழவின்போது வேப்பம் புண்ணாக்கு தொழு உரம் இடுதலின் முக்கியத்துவம், மண்வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்தல் பற்றி பேசினார். துணை மேலாண்மை அலுவலர் அந்தோணி பிரகாஷ், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருட்கள் பற்றியும், உழவர் செயலி பற்றியும் கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆரோக்கியராஜ் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி