அன்னவாசல் காவல்துறையினர் நேற்று பழைய கூட்டுறவு வங்கி அருகே ஒரு பெட்டிக்கடையை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெட்டிக்கடையின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.