புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு இலுப்பூர் ஆர்டிஓ அக்பர்அலி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்து அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், சாலை விதிகளை பின்பற்றி நடந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். சாலை விதிகளை மதிப்போம், விபத்துகளை தவிர்ப்போம் எனவும் சாலை பாதுகாப்பு விதிகள் போக்குவரத்து விதிகள் குறித்து பேசினார்.