புதுக்கோட்டை: தேங்காய்க்காக சகோதரர்கள் சண்டை

78பார்த்தது
மேலப்பட்டியை சேர்ந்த பவுல்ராஜ் இவரது தம்பி ஆரோக்கியராஜ். இவர்களது நிலம் அருகருகே உள்ளது. பவுல்ராஜ் நேற்று தனது வயலில் கிடந்த தேங்காயை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ஆரோக்கியராஜ் இது எனக்கு சொந்தமான மரத்திலிருந்து விழுந்தது என கேட்டு அடித்துக் கொண்டனர். காயமடைந்த பவுல்ராஜ், ஆரோக்கியராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவர் அளித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் விசாரித்தனர்.

தொடர்புடைய செய்தி