விராலிமலை: வழிவிட ஒதுங்கியவருக்கு நேர்ந்த சோகம்

2588பார்த்தது
சாலையில் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்கு சாலை ஓரத்தில் செலுத்தும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 50 வயது நபர் உயிருக்கு போராட்டம். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விராலிமலை கடைவீதியில் விராலிமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் வயது 50. இவர் தனக்கு சொந்தமான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் மேற்கண்ட இடத்தில் செல்லும் பொழுது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வெங்கடாஜலத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் வேளையில் அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இந்த விபத்து சம்பந்தமாக வெங்கடாஜலத்தின் மனைவி கொடுத்த புகாரின் பெயரில் விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி