திருச்சியிலிருந்து மாத்தூருக்கு பைக்கில் விஜயன்(28) என்பவர் சென்றுள்ளார். அப்போது மாத்தூர் அருகே அவருக்கு முன்னால் டாரஸ் லாரியை ஓட்டி சென்ற சவரிராஜன்(50) எந்தவித சிக்னலும் இல்லாமல் லாரியை நிறுத்தியதால் லாரியின் பின்புறம் பைக் மோதியதில் விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தாய் அளித்த புகாரில் மாத்தூர் காவல்துறையினர் சபரி ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.