புதுக்கோட்டை : கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் நீர்பழனியைச் சேர்ந்தவர் வெள்ளையன் 80. இவருக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. மேலும் பல்வேறு பிரச்சனைகளால் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். நேற்று (டிசம்பர் 31) காலை 10 மணி அளவில் வேல்ராம்பட்டி விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உறவினர் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி