மாயமான பல்கலை.கழக மாணவி - மண்டையூர் போலீசார் தீவிர விசாரணை

82பார்த்தது
மாயமான பல்கலை.கழக மாணவி  - மண்டையூர் போலீசார் தீவிர விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே கீழ மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது 17 வயது மகள் திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மூன்றாம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்த தகவல் கிடைக்காததால், அச்சதமடைந்த அவரது தந்தை ராமகிருஷ்ணன், மண்டையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாயமான கல்லூரி மாணவியை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி