மாத்தூர்: பைக் மீது கார் மோதி விபத்து -ஒருவர் காயம்

80பார்த்தது
மாத்தூர்: பைக் மீது கார் மோதி விபத்து -ஒருவர் காயம்
புதுகை, குளத்தூர் மண்டையூர் பவளம் நகரைச் சேர்ந்த பாஸ்கர் (65) என்பவர் ஆவூரிலிருந்து மண்டையூருக்கு பைக்கில் சென்றார். அப்போது அரிசிக்காடு பள்ளி எதிரே அடையாளம் தெரியாத காரில் வந்த நபர் மோதியதில் பாஸ்கருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மண்டையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோதிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி